வேலை இல்லா பட்டதாரி
வேலை இல்லா பட்டதாரி, படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞன் பற்றிய கதை தனுஷ் வேலை இல்லா பட்டதாரியாக கலக்கியிருக்கிறார். சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்து வேலை கிடைக்காமல் அப்பாவிடம் தண்டச்சோறு பட்டமும் வாங்குகிறார். தம்பியோ IT கம்பெனியில் நல்ல வேலையில் கடுப்பேத்துகிறார், புதிதாக குடியேறும் பக்கத்துக்கு வீட்டு பெண் அழகாக இருக்கிறாள் என்று அம்மா சொன்னதை கேட்டு அவளை பார்க்கும் முயற்சியில் டெலிகோப் செய்கிறார். நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்லும் தனுசிடம் இரநூறு ரூபாய்தான் அதுவும் அம்மாவிடம் மல்லுகட்டி வாங்கியது, வீட்டிற்கு அவரது பழைய மாடல் லூனா மோட்டார் சைக்கிளில் திரும்பும் போது அமலாபால் காரில் வந்து மோதுகிறார். இருவருக்கும் நட்பு தொடர்ந்து காதலாகிறது. ரூமில் திருட்டு தனமாக சிகரெட் பிடிப்பதை அப்பா கண்டுபிடித்து திட்ட அதை எதிர்த்து பேச அம்மா கோபம் கொண்டு தனுசை அடிக்க கோபித்து கொண்டு அம்மாவிடம் பேசாமல் இருக்கிறார். அமலாபால் கடற்கறையில் தன் காதலை தனுசிடம் சொல்ல முயற்சிக்கும் போது அம்மாவிடம் இருந்து அழைப்பு வருகிறது, அம்மாவிடம் கோபமாக இருப்பதால் செல்போனை எடுக்காமல் வீட்டிற்க்கு திரும்புகிறார். அங்கே அம்மா நெஞ்சு வலியால் இறந்திருக்கிறார் தம்பி மற்றும் அப்பா கோபம் கொள்கின்றனர். தன் தவறை உணர்ந்து அழுது புலம்புகிறார். அம்மாவின் நுரையீரல் தானம் கொடுக்கப்பட்ட பெண் தனுசுக்கு உதவ நினைக்கிறார், தன்னுடைய அப்பாவிடம் சொல்லி வேலை பெற்று தருகிறார். தனுசுக்கு கொடுக்கப்பட்ட ப்ரொஜெக்டில் போட்டி வருகிறது வில்லன் தனுஷ் கட்டி கொண்டிருக்கும் பில்டிங் வேலையை நிறுத்த பல தடங்கள்கள் உருவாக்குகிறார். இதையெல்லாம் தண்டி தன்னுடைய ப்ரொஜெக்டை எப்படி முடிக்கிறார் என்பதே கதையின் இறுதிக்காட்சி. இதில் வரும் நீண்ட வசனகாட்சி அனைவரையும் ரசிக்கவைக்கிறார் தனுஷ். சில கட்சிகளில் தனுசிடம் சூப்பர்ஸ்டார் சாயலும் தெரிகிறது. அமலாபாலை சுமாரான பிகர் என்று வெறுப்பேத்தி இருகிறார்கள். காலத்துக்கு ஏற்ற படத்தை கொடுத்து vipகளை ரசிக்க வைத்த படம்.
{[['']]}