அமர காவியம்
நான் படம் இயக்குனரின் அடுத்த படைப்பு என்ற
எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் அமர காவியம். ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கும்
ஆர்யாவின் சொந்த படம். அழகிய காதல் காவியம் என்பதால் ஒளிப்பதிவும், இசையும்
படத்தில் வெகுவாக கவர்ந்தது, ஒளிப்பதிவிற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களும்
அற்புதம். படத்தின் தலைப்பே இறுதிக் கட்சிகளை உறுதி செய்தது, அனாலும்
எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களை நெகிழ வைத்தது. எண்பதுகளில் நடக்கிற கதை என்று
சொல்லபட்டாலும் அத்தகைய காலக்கட்டம் உணரப்படவில்லை, படத்தின் கலர், மேக்கப்
மற்றும் உடை அலங்காரம் இவற்றில் சிறிய மாற்றங்கள் செய்திருந்தால் எண்பதுகளை
முழுமையாக காட்டியிருக்கும். இயக்குனர் சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதால் ஒளிபதிவை
மட்டுமே கவனம் செலுத்தி இருகிறார் என்று தோன்றுகிறது. படத்தின் இறுதிக்காட்சி வரை
கதை இழுக்கப்படுகிறது, அனுபவம் உள்ள நடிகர் தம்பி ராமைய அவர்களை
பயன்படுத்தவில்லை, இருபினும் தன்னுடைய கட்சிகளை பூர்த்தி செய்கிறார். சத்யா நன்றாக
நடித்திருக்கிறார், அவருடைய கண்கள் ஆர்யாவின் சாயலை வெளிப்படுத்துகிறது. ஆனாலும்
அவரது முகம் இறுக்கமாக இருப்பதால் உணர்சிகளை வெளிபடுத்தவில்லை (அண்ணன் ஆர்யா விடம்
பாடம் கற்க வேண்டும்). மியா ஜார்ஜ் கும்கி ஹீரோயின் போன்று அனைவரையும் கவர்ந்து
இருக்கிறார். மொத்தத்தில் படத்தின் கிளைமாக்ஸ் அமர காவியம் (கிளைமாக்ஸ் வரை பொறுமை
வேண்டும்). அமர காவியம் ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கருக்கும், இசையமைப்பாளர்
கிப்ரான்பக்கும் ஒரு சலாம்.
{[['']]}